இப்படிக்கு இவர்கள்

கொள்கை மாற்றம் வேண்டும்

செய்திப்பிரிவு

‘தேசிய அவமானம்’ என்னும் தலையங்கம் மிகச் சரியாகவே எழுதப்பட்டுள்ளது.

உழுவோர் உலகுக்கு அச்சாணி. உழந்தும் உழவே தலை என்றெல்லாம் தொடர்ந்து பேசினாலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. உலகுக்கு உணவு படைக்கும் வேளாண்மைக்கு மானியங்கள் தந்தால் வேம்பாய் எண்ணும் ஆளும் வர்க்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானியங்கள், வரிச்சலுகைகள் எனச் சலுகை மழை பொழிகின்றன.

எனவே ,ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்கைகளை மாற்றாமல் வேளாண்மையில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

- சேகரன், பெரணமல்லூர்.

***

மக்களுக்கான ஆட்சி எப்போது?

இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் பராமரிப்பு என்று கூறி மின்தடை நிகழ்த்தப்படுமோ தெரியவில்லை? எந்தவொரு தொழிலானாலும் மின்சாரத்தை நம்பியே உள்ளது. ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தக்கூடிய அந்த மின்சாரத்தை அரசு கையில் வைத்துக்கொண்டு பகல் முழுதும் தடை செய்தால் நாடு எப்படி முன்னேறும்? பெரு நிறுவனங்களுக்குத் தடையில்லா மின்சாரம் கொடுக்கத் துணிந்த அரசு, எப்போது நம் மக்களுக்காக ஆட்சி செய்யும்?

- அ. மன்சூர் அஹமத்,மதுரை.

SCROLL FOR NEXT