அ. நாராயணமூர்த்தியின் ‘நீரின்றித் தள்ளாடும் இந்தியா’ கட்டுரை படித்தேன். மிருக உணர்வுடன் பொருளாதார வளர்ச்சியைத் துரத்துவதால் விளையும் பல்வேறு எதிர்வினைகளில் நீர் பற்றாக்குறையும் ஒன்று.
ஆண்டு பொருளாதார வளர்ச்சியை மையப்பொருளாக வைத்து செயல்படத் தொடங்கியவுடனேயே நாம் எதிர்காலத்திடம் இருந்து கடன் பெற்று நிகழ்கால நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தள்ளப்படுகிறோம் என்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்-ன் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
வளர்ச்சிக்கான அழுத்தம் அதிகரிக்கும்போது இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு பின்னுக்குத் தள்ளப்படுவதும் வளரும் பொருளாதாரங்கள் பின்பற்றும் அமைப்புமுறைகளின் அடிப்படைக் குறைபாடாகும்.
மொத்தத்தில், வருங்காலத் தலைமுறையினருக்கு எந்த வளங்களை விட்டுச் செல்லப்போகிறோம் என்பதைவிட, அவர்களை இயற்கை வளங்கள் தொடர்பான வறுமை என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறோம் என்பதுதான் கவலை அளிக்கக்கூடிய செய்தியாகும்.
- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.