2010-ல் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால், ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டு, வங்கியில் வைப்புநிதியாக அது வைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் வருவாயை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது செம்மொழித் தமிழ் விருது.
நாட்டிலேயே மிக உயரிய பரிசுத் தொகையைக் கொண்ட விருது இது - ரூ.10 லட்சம். ‘ஞானபீடம்’ விருதைவிடவும் இந்த விருதைப் பெறுபவர் அதிகமான தொகையைப் பெற வேண்டும் என்று எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.
கோவையில் 2010-ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முதல் ஆண்டு விருது அயல்நாட்டு அறிஞர் அஸ்கோ பர்ப்போலோவுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்த விருது இன்றுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. முடக்கப்பட்டுவிட்டது. தமிழ் அறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்ற வருத்தம் நம் சமூகத்தில் தொடர்ந்து நிலவும் சூழலில், இருக்கும் அங்கீகாரங்களையும் பறிப்பது முறையல்ல.
செம்மொழி நிறுவனத்தின் இன்றைய பொறுப்பு இயக்குநருக்கு இதுபற்றியெல்லாம் கவலை உண்டா?
- மு.பி. பாலசுப்பிரமணியன்,பேராசிரியர், சென்னை.