இப்படிக்கு இவர்கள்

கண்களைக் காப்போம்

செய்திப்பிரிவு

‘ஒரு பிடி மண்' தொடரைப் படிக்கும்போது, நம் நாட்டின் முதுகெலும்புத் தொழிலான விவசாயம் வருங்காலத்தில் என்ன ஆகுமோ? என்று நெஞ்சம் பதைக்கிறது.

ஆள்பவர்களுக்கு விவசாயம் மீது அக்கறை இல்லாமல் தொழில்துறை பற்றியே அதீத கவலை இருப்பது நம்மைப் பீதியுறச் செய்கிறது.

நிலமெடுப்புச் சட்டமெல்லாம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும். விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் ஆசை காட்டப்படும் விலை ஒரு தற்காலிக மகிழ்ச்சி மட்டுமே.

நெடுங்காலத்துக்கு நாடு துயரத்துக்கு உள்ளாகும் அபாயம் அதில் உள்ளது. விவசாயத்தை, உணவு உற்பத்தியைப் பாதிக்கும் எந்தத் தொழிலும் வேண்டாம். விவசாயத் துறையும் தொழில்துறையும் நமது இரு கண்கள். இரண்டு கண்களையும் காப்போம்!

- வி. குமரேசன்.மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT