கணிதம் அறிவோம் பகுதியில் வெளியான ‘பலகாரம் தின்ற நாள் கணக்கு’ கட்டுரை மனதை நெகிழ்த்துவதாய் இருந்தது.
கொறுக்கையூர் காரிநாயனார் கணிதத் திறம் இன்று படித்தாலும் வியப்பாக இருக்கிறது. கணக்கதிகாரம் பற்றிய கட்டுரை நமது முந்தையரின் கற்பனைத்திறன், கவிதை நயம், கணித நிபுணத்துவம் ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவியது.
புத்தகத்தைக் காண வேண்டும் என்கிற ஆவல் பெருகிவிட்டது. கட்டுரை ஆசிரியர் எஸ். தரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- பிரபாகர்பாபு, சென்னை.