இப்படிக்கு இவர்கள்

நாட்டின் முதுகெலும்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் வருகிற நிதி ஆண்டுக்கான (2015-16) பட்ஜெட், வேளாண் துறை வளர்ச்சிக்கும் பாரம்பரியமான நீர்வளங்களைப் பாதுகாக்கவும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைய வேண்டும்.

விவசாயம் நம்நாட்டின் முதுகெலும்பு. அதை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டும். தமிழகத்தில் விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் கடன் பிரச்சினை காரணமாக அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் மற்றும் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள், பெருகிவருகிறது. அதை வேடிக்கை பார்க்காமல் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மேலும், விவசாயத் துறையில் புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளில் ஊக்கம் காட்டி, அதனை சிறு, குறு மற்றும் நலிவடைந்த விவசாயிகளும் பெருமளவில் பயன்படுத்தும் வகையில், வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் துறை மற்றும் வேளாண் வல்லுநர்கள் கூட்டாகச் செயல்படத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

விவசாயம் லாபகரமான தொழிலாக மாறி, ஆண்டுதோறும் சாகுபடிப் பரப்பு அதிகரித்துக்கொண்டே சென்றால், விவசாயியின் வாழ்க்கைத் தரம் மேன்மை அடையும்.

- சி. விஜய் ஆனந்த்,போத்தனூர்.

SCROLL FOR NEXT