‘நல்வரவு, உறவுக்கு மரியாதை’ கட்டுரை, சிங்கள ஒன்றியத் தேசிய அரசியல் நல உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துகிறது.
உலகத் தமிழினத்தின் யதார்த்தமான பார்வையில் ராஜபக்ச ஒரு இனப்படுகொலையாளர் என்ற நிலை மட்டுமே உள்ளது. இந்த யதார்த்தத்தை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு செயல்படத் தவறுகிறார்கள். தமிழினத்தின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், எதிர்நிலையில் நிற்பது அரசியல் அறநெறியை மீறுவதாகும். மேலும், இது அடிப்படையில் மானுட நெறிகளுக்கும் எதிரானது. இந்திய ஒன்றிய அரசியலின் எதிர்கால நலன்களுக்கும் ஆபத்தானது. வணிக நோக்கங்களும் ஆதிக்க நோக்கங்களும் மட்டுமே அரசியலில் மேலோங்குவது, ஜனநாயக நெறிகளையும் அழித்துவிடும். ஒரு சிறிதளவேனும் ஆட்சியாளர்கள் இதைக் கருத வேண்டும்.
- சு. மூர்த்தி,திருப்பூர்.