‘கோப்பையைத் திருப்பிக் கொடுக்க மாட்டோம்’ கட்டுரை உத்வேகம் தருவதாய் இருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு முன்பு வரை இந்திய ரசிகர்களே இந்திய அணி மீது நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தார்கள்.
முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்ற பின்னர் வழக்கமான உற்சாக மனநிலைக்கு இந்திய ரசிகர்கள் திரும்பிவிட்டனர்.
கோப்பையைத் திருப்பிக் கொடுக்காமல் நாடு திரும்ப, இந்திய அணி இதே போன்ற மன உறுதியுடன் விளையாட வேண்டியது அவசியம்.
- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.