பிப்ரவரி 27-ம் தேதியன்று வெளியான செய்தியில், 4 பேரைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றினார் என்று ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது.
அந்தப் பெண் செய்தது தவறுதான். ஆனால், ‘மயக்கி’, ‘கல்யாண ராணி’ போன்ற சொற்கள் ‘தி இந்து’ நாளிதழின் தரத்துக்கு ஏற்புடையதாக இல்லை.
இனி வரும் காலங்களில் பாலினப் பாகுபாடுகள் தொனிக்கும் வார்த்தைகளைத் தவிர்க்கும்படி பெண்ணிய ஆய்வாளர் என்ற முறையில் எனது கருத்தைப் பதிவுசெய்கிறேன்.
- எஸ். சுதா,திருச்சி.