முகேஷ் ஒரு குற்றவாளி. ஒரு கயவன். அவனிடத்திலிருந்து எப்படி மனிதாபிமான முறையில் பதில் கிடைக்கும்.
அவனுடைய மனநிலையுடன் இந்திய மக்களின் மன நிலையை ஒப்பிடுவது மாபெரும் தவறு. செய்த தவறுக்கு தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளி அவன். செய்த தவறை உணராமல் பேசுகிறான். முதலில் பெண்களைத் தவறாகச் சித்திரிப்பதைச் சமூகம் நிறுத்த வேண்டும்.
திரைப்படங்களில் பெண்கள் இழிவாகக் காட்டப்படுகிறார்கள். இப்போதெல்லாம் குடும்பத்துடன் படம் பார்க்க முடிவதில்லை. இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாசமாக உள்ளது. பெண்களைத் தாயாக மதிக்கும் கலாச்சாரத்தை நாம் மறந்துகொண்டிருக்கிறோம். இது நல்லதற்கல்ல!
- சௌத்ரி லோகநாதன்,மின்னஞ்சல் வழியாக…