82 வயது முதியவரான டிராபிக் ராமசாமியை எந்த அடிப்படையில் அதிகாலையில் கைதுசெய்தார்கள்? விடிந்தால் ஓடி ஒளிந்துகொள்வார் என்றா?
விடியும் வரைகூட கருணை காட்டத் தெரியாத துறைதான், காவல் துறையா? காஷ்மீரில் 150 பேரின் மரணத்துக்குக் காரணமான பிரிவினைவாதியை அந்த அரசு விடுதலை செய்யுமாம்.
ஆனால், மக்கள் சேவையாற்றும் டிராபிக் ராமசாமி போன்றவர்கள் மீது, ‘கொலை மிரட்டல்’ எனும் பெயரில் கைது நடவடிக்கையாம்! இதுதான் நாம் பெற்ற சுதந்திரமா?
- ஜெய்காந்த், ‘தி இந்து’ இணையதளத்தில்…