நோபல் பரிசு வாங்கி, உலகப் புகழ்பெற்ற தியாகத்தின் திருஉருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் சேவையைச் சந்தேகப்படுவது, இந்தியத் திருநாட்டுக்கு மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலாகும்.
சேவையும் செய்ய மாட்டோம், சேவை செய்வோரையும் குறை கூறுவோம் என்பது அழுக்குப் படிந்த மனநிலையின் வெளிப்பாடு. தொழுநோயாளிகளை அன்போடு தொட்டு அரவணைத்து அவர் அணுகியவிதம், பெற்ற அன்னைகூட செய்ய முடியாத தவம்.
அப்படிப்பட்ட அந்தப் புனித ஆத்மாவைக் கண்ணியப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை; இழிவுபடுத்தாமலாவது இருப்போம்!
- கேப்டன் யாசீன்,சென்னை.