இப்படிக்கு இவர்கள்

ஆதரவே மருந்து

செய்திப்பிரிவு

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் மகள் விஜயா அளித்த பேட்டியைப் படித்துக் கண் கலங்கிவிட்டேன்

“இந்த நாட்டைத் திருத்தவே முடியாது... வேண்டாம் வந்துடுங்க அப்பா…” என்ற அவருடைய மன உளைச்சல் வேதனை தருகிறது.

அவர்களுடைய மன உளைச்சலுக்கு, நம்முடைய மனப்பூர்வமான ஆதரவே மருந்தாக அமையும்.

கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் மர்ம மரணம், தமிழ்நாட்டில் வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை, மாநிலக் காசநோய் அதிகாரி ஜெ. அறிவொளியின் திடீர் மரணம் இப்படி நியாயமான அதிகாரிகளின் அநியாய மரணங்கள் எதை நமக்கு உணர்த்துகின்றன - நேர்மையாக வாழ்வதே தவறு என்றா?

ஏவிஎம். சாமி,திருநெல்வேலி.

SCROLL FOR NEXT