இப்படிக்கு இவர்கள்

உலக மகா பணக்காரர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

செய்திப்பிரிவு

சூசன் மூரின் எழுதிய ‘ஏற்றத்தாழ்வு இயற்கையானதா?’ கட்டுரை படித்தேன். இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 90 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தாலும் அவர்களால் எந்த அளவு நமது நாட்டின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும். மலைக்க வைக்கும் அளவு அவர்கள் ஏற்படுத்தும் கடன் நிலுவைகளால் நமது நாட்டின் வளர்ச்சி முடக்கப்படுகிறது. அந்த வகையில், ஏற்றத்தாழ்வு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. அரசு முயற்சியெடுத்தால் இந்த ஏற்றத்தாழ்வைத் தடுக்கலாம்.

- சொ. சந்தனக்குமார்,சிவகிரி.

SCROLL FOR NEXT