மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் முதலாவது பட்ஜெட்டில் பயணக் கட்டணம் கூட்டப்படவில்லை என்றாலும், சரக்குக் கட்டணத்தை ஏற்றியதால் மறைமுகமாகப் பொருட்களின் விலை கூடும்.
தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்தாலும் பயணக் கட்டணம் குறைக்கப்படாமல் இருப்பது, தினமும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு வருத்தம் தரும் விஷயம்தான்.
- எம்.ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.
***
மத ஒற்றுமை
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு 2015-16-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் திருச்சி - நாகூர் புதிய ரயில் பாதை திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் பாதை நீட்டிக்கப்படும். இந்தப் புதிய ரயில் பாதை அமைக்க ரூபாய் 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் தஞ்சாவூர், நாகூர் மற்றும் வேளாங்ண்ணி ஆகிய வெவ்வேறு மதங்களைச் சார்ந்த ஆலயங்கள் ஒரே ரயில் பாதையில் அமையும். மத ஒற்றுமைக்கு இந்தப் பாதை நல்ல எடுத்துக்காட்டுதானே?
- ஜி. புருசோத்தமன்,மின்னஞ்சல் வழியாக…