இப்படிக்கு இவர்கள்

காந்தி ஜெயந்தி விடுமுறை தேவையா?

செய்திப்பிரிவு

கோவா அரசின் வருடாந்திர விடுமுறைப் பட்டியலில், காந்தி ஜெயந்தி விடுபட்டது ‘தட்டச்சின்போது நேர்ந்த தவறு’ என்று அம்மாநில முதல்வர் கூறியிருப்பதை ஏற்க முடியவில்லை.

சுமார் 36% வாக்கை, சந்தர்ப்பவசத்தால் வாங்கிக்கொண்டு நாட்டையே தங்கள் பெயருக்கு, இந்தியர்கள் எழுதிக் கொடுத்துவிட்டதாக எண்ணி ஆணவத்தில் அலைந்துகொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

காந்திகள் வழிமறிக்கப்படும்போது, பகத்சிங்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.

- பாண்டி,‘தி இந்து’ இணையதளத்தில்…

***

காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிப்பதால் என்ன பயன்? காந்தி இருந்திருந்தால்கூட ‘வாரம் ஒரு விடுமுறை போதும்.

சில முக்கியப் பண்டிகைகள் தவிர அனைத்தையும் வேலை நாட்களாக மாற்றலாம்’ என்று சொல்லியிருப்பார். காந்தி ஜெயந்தி அன்று எத்தனை பேர் அவரது கொள்கைகள், சிந்தனைகள் பற்றிப் பேசியோ நினைத்தோ அந்த நாளைப் பயனுள்ள வகையில் கழிக்கிறார்கள்?

விடுமுறை நாளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே நேரம் போக்கிவிடுகிறார்கள் மக்கள். எனவே, காந்தி ஜெயந்தி அன்றும் அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவதற்காக, நாம் அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்தலாம். விடுமுறை தேவை இல்லை.

- முருகன்,‘தி இந்து’ இணையதளத்தில்…

SCROLL FOR NEXT