இப்படிக்கு இவர்கள்

இன்னும் நேரம் இருக்கிறது கேஜ்ரிவால்

செய்திப்பிரிவு

‘ஆம் ஆத்மி: ஒரு கனவின் சிதைவு’ கட்டுரை - அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரியான விமர்சனங்களை முன்வைக்கிறது.

ஒவ்வொரு குடிமகனும், நாட்டில் நிலவும் ஊழலையும், லஞ்சத்தையும் கண்டு தாளாமல் கொதித்தெழுந்து, அவருக்குப் பின்னல் அணிவகுக்கத் தயாரான நிலையில், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியைத் தருவார் என டெல்லி மக்கள் அவரை முதல்வராக்கினர்.

ஆனால், அவரும் மற்ற கட்சிகளைப் போல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதை நிரூபித்துவிட்டார். ஆ.ஆ.க-வில் அதிகாரம் செலுத்த எண்ணினார்.

ஆனால், அது பலிக்கவில்லை. இன்னும் குடி முழுகிப் போய்விடவில்லை. மக்களின் நன்மைக்காகத் தன் மனதை மாற்றிக்கொண்டு, வெளிப்படையான, நேர்மையான ஆட்சியைத் தந்து, கட்சியையும் காப்பாற்றுவார் என நம்புவோம்.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

SCROLL FOR NEXT