‘கோவில்பட்டியில் உள்ள சண்முகா திரையரங்கில் ரூபாய் 1,000 செலுத்தினால், ஆண்டு முழுவதும் சினிமா’ என்ற ‘தி இந்து’ இணையதளத்தில் வெளியான செய்திக் கட்டுரை வாசித்தேன்.
இப்போதெல்லாம் படம் வெளியான இரண்டு மூன்று நாட்களிலேயே திருட்டு டிவிடி வந்துவிடுகிறது. தகவல் தொழில்நுட்பம் பெருகியதன் காரணமாக, வீட்டிலேயே பெரும்பாலானோர் திரைப்படம் பார்த்துவிடுகிறார்கள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வசூல் இல்லாத காரணத்தால் திரையரங்குகள், திருமண மண்டபங்களாகவும் வணிக வளாகங்களாகவும் மாறிவருகின்றன.
இந்நிலையில், சண்முகா திரை அரங்கத்தினரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதே!
- எம்.ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.