இப்படிக்கு இவர்கள்

ஆரோக்கிய சிந்தனை

செய்திப்பிரிவு

எ பியூட்டிஃபுல் மைண்ட் பற்றிய டாக்டர் கார்த்திகேயனின் விமரிசனம், மிகத் தெளிவாக மனப்பிறழ்வு ஏற்படுத்தும் பாதிப்புகளை நம்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

தமிழ் சினிமா கடக்க வேண்டிய தூரங்களை மிக இயல்பாகச் சொல்கிறார் கட்டுரையாளர். படத்தில் வரும் ஜான் நாஷ் வாழ்க்கையையும், காதலையும்பற்றி நுட்பமாகத் தனக்கே உரிய உளவியல் நோக்கில் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

எத்தனை நாட்களுக்குத்தான், பிறழ்நிலை மனம்கொண்டவர்கள் வன்முறைச் செயல்களில், அசாத்திய பலத்துடன் ஈடுபடுவதை நாம் பார்ப்பது? நடைமுறை வாழ்க்கையில் தன்னுடைய மனம் பேதலித்த சகோதரனையோ அல்லது சகோதரியையோ தங்களுடன் சமமாக நடத்தி விளையாடும் எளிய குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையோடு வாழ்ந்தவர்களும் இரு பாலினத்திலும் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களையெல்லாம் முன்வைத்து ஆரோக்கிய சிந்தனை உள்ள படங்களை எடுக்கலாம் என்னும் கருத்தை கார்த்திகேயன் வலியுறுத்தியிருப்பது அருமை.

- மெய்யப்பன் சாந்தா, மதுரை.

SCROLL FOR NEXT