இப்படிக்கு இவர்கள்

மருத்துவருக்கான வாய்ப்பு

செய்திப்பிரிவு

மனிதாபிமான சிகிச்சைக்கு என்ன வழி? கட்டுரை படித்தேன். அங்கிங்கெனாதபடி பொருளாதாரரீதியாக முன்னேறிய தொழில் துறைகளின் பட்டியலில், மருத்துவத் துறையை முதலிடத்தில் நிற்க வைக்க முனைப்புடன் செயல்படும் மருத்துவ சமுதாயத்தை என்னவென்று சொல்வது? எச்சரிக்கைப் பதாகையை ஏந்திப்பிடிக்கும் பி.எம். ஹெக்டே போன்ற மனிதாபிமான மருத்துவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நோயாளியின் வேதனையை நீக்கத் தனக்குக் கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பாகக் கருதி, மருத்துவர்கள் குறைந்தபட்ச மனசாட்சியுடனாவது சிகிச்சையளிக்க முன்வர வேண்டும்.

ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

***

தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு மனிதநேயம் வளரவில்லை என்கிற ஆதங்கம் டாக்டர் ஹெக்டேவின் கட்டுரையில் வெளிப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நிறைய குறைபாடுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதற்கான தேவை இல்லா திருந்தும் நோயாளிகள் சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பொதுவாக, மருத்துவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

- டாக்டர் ஜி. ராஜமோகன்,ஆசிரியர்: ஹெல்த் மாத இதழ், சென்னை.

SCROLL FOR NEXT