இப்படிக்கு இவர்கள்

நிலம், நெல், வாழ்க்கை - மண்ணுடன் பேசும் திறன்

செய்திப்பிரிவு

நெல் அறுவடைக்குப் பின்னர் தமிழ் விவசாயி மேற்கொள்ளும் சேமிப்பு நடவடிக்கைகள், ‘நெல்லைப் போற்றிய காலம் அது’ கட்டுரையில் நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளன.

‘நெல் அறுவடை’ என்ற நிகழ்வைச் சுற்றியுள்ள தமிழ் வார்த்தைகள்தான் எவ்வளவு உள்ளன! குட்டான், தாளோடு தாளாக, இஞ்சுதல், காக்கா கால் ஓடிய வரப்பு, கண்டு, பட்டறை, வண்டிச்சோடு, இருப்புக் கட்டுதல், கருக்காய், பத்தாயம், கஞ்சங்கோரை, குந்தாணி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மாட்டுக்கும் ஒரு பங்கை அளித்த தமிழனின் பாங்கு, இப்போது காணமுடிவதில்லை என்ற வருத்தம், இக்கட்டுரையைப் படித்தவுடன் அனைவருக்கும் உண்டாகும்.

- ஸ்ரீதரன் வெங்கட்ராமன்,மின்னஞ்சல் வழியாக…

***

கருத்துப் பேழைப் பகுதியில் வெளியான ‘நெல்லைப் போற்றிய காலம்’ கட்டுரை மிகச் சிறப்பு. இறந்த காலத்தில் சொல்லப்பட்ட தலைப்பே இன்றைய நிலையைச் சொல்கிறது. சொந்தமாக விவசாய நிலம் இல்லாத வீட்டிலும் கட்டாயம் ஒரு மண் குதிரோ அல்லது மரக் குதிரோ இருக்கும். இன்று அவை அனைத்தும் எங்கே போயின? விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்ட நிலையில், பெரு விவசாயிகள் தொழிலை மாற்றிக்கொண்டனர். சிறு விவசாயிகள் கூலித் தொழிலாளிகளாக மாற்றப்பட்டனர். மண்ணுடன் பேசும் திறன் பெற்ற விவசாயிகள், அரசுடன் பேசும் திறனிழந்து போய்விட்டதுதான் கொடுமை!

- சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.

SCROLL FOR NEXT