பெரும்பான்மை மக்களாலும், தமக்குத் தாமேயும் தன்னை ஒரு தனிப் பிறவியாகத் தெருக்களிலும், சமுதாயத்துக்கு இடையிலும் ஒதுங்கிக்கொண்ட ஒரு படைப்பினத்தை முன்னேற்றும் விதமாக, அரசாங்கமே அவர்களை மூன்றாம் பாலினமாக அறிவித்தது. ஆனால், அரசு சார்ந்த துறையே வரி வசூலிக்க அவர்களைத் தெருவில் இறக்கி இழிவுபடுத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல்.
- ஜி. க்ஷாபி,ஏர்வாடி