இப்படிக்கு இவர்கள்

தோல்வி இல்லாத் திட்டம் வேண்டும்

செய்திப்பிரிவு

அரசின் திட்டச் செயல்பாடுகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது, ‘கறவை மாடுகள் திட்டத்தின் தோல்வி’ என்கிற கட்டுரை. அரசின் பல திட்டங்கள் இதுபோன்ற குளறுபடிகளால் நிறைந்திருக்கின்றன.

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதைப் பெரும்பாலான சமயங்களில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உணர்வதேயில்லை.

பிறகு, திட்டம் நிறைவேற்றப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கும் முயற்சியால், திட்டத்தின் செயல்பாட்டில் செலவுகள் அதிகமாகி, திட்டத்தையே கைவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது.

அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை மட்டுமே குறிவைத்துத் திட்டங்களைத் தீட்டாமல் ஒரு திட்டம் நிறைவேறத் தகுந்த காரணிகளை ஆராய்ந்து செயல்படுத்தினால், நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT