இப்படிக்கு இவர்கள்

வரலாற்று நாயகர் மாயாண்டி பாரதி

செய்திப்பிரிவு

‘வரலாற்று நாயகர் மாயாண்டி பாரதி’ கட்டுரை அறிவையும் உள்ளத்தையும் ஒருசேர நெகிழ வைத்தது.

70-களில் மதுரையில் அன்றைய தீக்கதிர், செம்மலர் ஆசிரியர் தோழர் கே.முத்தையா, மாயாண்டி பாரதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடி, கண்களைக் கசியவைத்தன.

மிகுந்த அன்புடன் பேசினார். அன்றைய காலத்தில் நாங்கள் ஐயாவின் தியாக வாழ்விலும் அவர்தம் எழுத்துவீச்சிலும் தீராக் காதலுடன் இருந்தோம். என்ன மாதிரியான புரட்சிகர வாழ்க்கை, சிந்தனை என்று வியந்துபோவோம்! முதுமை அடைந்த பின் கோவை ‘நிகழ்' இதழில் அவரது நேர்காணல் வெளியாகியிருந்தது. தள்ளாத வயதிலும் சமூக, அரசியல் நிகழ்வுகளைப் பெரும் அக்கறையுடன் அதில் விவாதித்திருந்தார்.

நடப்பு அரசியல் நடவடிக்கைகளில் தான் பணியாற்றிய கட்சி உட்பட அவருக்குப் பெரிய மனவருத்தம் இருந்தது. கொள்கைகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள், அரசியல் செயல்பாடுகள் நேர்மையற்று இருந்த நிலையைப் பற்றி அவர் தன் மனக்குறையை வெளிப்படுத்தியிருந்தார்.

‘செத்த பின்பு எனக்குச் சிலை வைக்காதீர்!' என்று புதுமைப்பித்தன் சொன்னதுதான் நினைவுக்குவருகிறது! மாயாண்டி பாரதியின் வாழ்வும் செயலும் நம் அனைவருக்கும் வழிகாட்டி என்றுதான் சொல்லவேண்டும்.

- ஜே.எஸ். ஷாஜஹான் முபாரக்,உடுமலைப்பேட்டை.

SCROLL FOR NEXT