கடந்த வருடம் டிசம்பரில் பெருநாட்டில் நடந்த உலக நாடுகளின் பருவநிலை மாற்றத்துக்கான விவாத மாநாட்டில், வளர்ந்த நாடாகிய அமெரிக்கா, வளரும் நாடுகளுக்கு ஒரு ஆணையைப் பிறப்பித்தது. அது ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் என்பதிலிருந்து 2.5 பில்லியன் டாலர் என்று கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்ததே ஆகும்.
இது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் முடிந்த வரையில் கார்பனை வெளியேற்றி, பருவநிலை மாற்றத்துக்கு வழிவகுத்துவிட்டு, இப்போது வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்தது. இதற்கு இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.
இப்போது ‘கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன்' என்ற சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் திட்டத்தின் வாயிலாக மீண்டும் தனது ஆதிக்கப்போக்கை நிரூபிக்கின்றனர். செய்வதையெல்லாம் செய்துவிட்டு, பழியை மட்டும் வளரும் நாடுகளின் மீது சுமத்துகின்றனர்.
- சொ. சந்தனக்குமார்,சிவகிரி.