இப்படிக்கு இவர்கள்

பிழைகள் ஏற்படுத்தும் விளைவுகள்

செய்திப்பிரிவு

தமிழ்ப் பாடநூல்களில் உள்ள பிழைகள் பற்றிய (‘இவ்வளவு பிழைகளா, நம் பாட நூல்களில்?’) கட்டுரை அதிர்ச்சி தந்தது.

இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும் என்பதுடன் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருக்கிறார்களா? பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல; போட்டித் தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோரும் இந்தப் பாடநூல்களையே படிக்கின்றனர்.

அவர்களும் தவறான விடையைத்தான் எழுதுவார்கள். இதற்குக் காரணமாக இருக்கும் பாடநூல்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றங்களில் அவர்கள் வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை அவசியம்.

- த.சுரேஷ்பாபு,கும்பகோணம்.

SCROLL FOR NEXT