இப்படிக்கு இவர்கள்

போர்க் காரணிகள்

செய்திப்பிரிவு

ஏஞ்சலினா ஜோலியின் - ‘இவர்களை நாம் கைவிட்டுவிட்டோம்’- கட்டுரையின் தமிழ் வடிவம், அதிரவைக்கும் சம காலச் சவால்கள் மிகுந்த உலகச் சூழலின் பகுதி ஒன்றைப் பிரதிபலிக்கிறது. பகைமை, வெறுப்புணர்வு, வன்மம் போன்றவை விதைக்கப்படும் உள்ளங்களில், வன்முறை செழித்துப் பயிராகிறது.

‘உலகம் யாவையும் தாமுளவாக்கத்' துடிக்கும் ஏகாதிபத்திய வெறியின் ஆயுதச் சந்தை, ஒடுக்குமுறை மிகுந்த வர்த்தக தாகம் போன்றவையே போர்களை உருவாக்கிவருகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. சொந்த மக்களின் நலனையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

இராக்கில் நடத்தப்பட்ட போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் அன்னையர் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் இல்லத்தின் வாசலுக்குச் சென்று நடத்திய போராட்டங்களே அதற்குச் சாட்சி!

- எஸ். வி. வேணுகோபாலன்,சென்னை.

SCROLL FOR NEXT