வரி வசூல் செய்ய திருநங்கையரை ஆடவைத்த சென்னை மாநகராட்சியின் செயல், அவர்களுடைய முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.
விளையாட் டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். திருநங்கைகள் என்று அவர்களை அழைக்கும் பக்குவமே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வழக்கத்தில் வந்துள்ளது.
இதற்கு முன் அவர்களை அழைக்க இந்தச் சமூகம் பயன்படுத்திய சொற்களை எண்ணிப்பார்க்கும்போது அவர்களின் துயரத்தை வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாது. தற்போது திருநங்கைகளைக் குறிப்பிடும் வார்த்தைகளில் மட்டும்தான் நாகரிகம் உள்ளதான பாவனை தோன்றுகிறது. அவர்களை நடத்தும்விதத்தில் படித்த சமூகத்துக்குக்கூட நாகரிகம் இல்லை என்பதையே சென்னை மாநகராட்சியின் செயல் சுட்டுகிறது.
- ஜோ.எஸ். நாதன்,கீழக்கரை.