இப்படிக்கு இவர்கள்

சுகாதாரமின்மையே காரணம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி, மக்களிடம் அச்சத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவருவது ஒருபக்கம் என்றால், இதைப் பயன்படுத்தி, மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்திருப்பது, அருவருக்கத் தக்க நிகழ்வாக இருக்கிறது.

மருந்துக் கடைகளிலும் மருந்துகளின் விலையை அதிகரித்து விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நேரங்களில், அரசு முழுப் பொறுப்பு எடுத்துக்கொண்டு மக்களுக்குத் தேவையான நோய்த் தடுப்புச் சூழல்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்களும் நோயிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதைத் தெரிந்து, அந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இதைப் பற்றி, அமெரிக்காவில் உள்ள அலெக்சாண்ட்ரியா பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுசெய்ததில், மக்களிடம் உள்ள சுகாதாரமின்மையே இதற்குக் காரணம் என்கின்றனர்.

அதனால், முழுமையான உடல் சுத்தம் பேணி பன்றிக் காய்ச்சலில் இருந்து விடுபடுவோம்.

- அஹமது சலீம்,ஏர்வாடி.

SCROLL FOR NEXT