‘அன்புக்கு ஒரு ஆக்சிடோசின்’ கட்டுரை, இன்றைய காலத்துக்குப் பொருத்தமான, அனைவரும் அறிய வேண்டிய செய்திகளைக் கொண்டுள்ளது.
பெற்றவர்களுக்கு அன்பையும் பாசத்தையும் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வுகூட பிள்ளைகளுக்கு இல்லாதது வேதனை அளிக்கிறது. முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் முதியவர்களின் மனநிலை தியானத்துக்கு ஒத்துழைக்குமா என்பது கேள்விக்குறியே. தியானத்தைவிடக் கூடுதலான சக்தி அன்புக்கும் பாசத்துக்கும் மட்டுமே உண்டு.
அதுவே அவர்களை இறுதிவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். பெற்றோரைப் பேணுதல்குறித்த மனநிலையை, வரப்போகும் தலைமுறையிடமாவது ஏற்படுத்துவதற்கான வழிகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய சமூகம்.
- ம.மீனாட்சிசுந்தரம்,சென்னை.