இப்படிக்கு இவர்கள்

நிஜம் பேசும் பிணம்

செய்திப்பிரிவு

கருத்துப்பேழை பகுதியில் ஞாயிறு அன்று வெளியான ‘பிரேதம் உண்மைதான் பேசும்’ கட்டுரை, முகத்தில் அறையும் உண்மைகளைச் சொன்னது.

மரணத்துக்கான காரணத்தைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவரால் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியும்.

அப்படியிருக்க பெரும்பாலான பிரேத பரிசோதனைகள் முறையாகச் செய்யப்படாமல் ஏனோதானோவென்று செய்யப்பட்டு காவல்துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டு, வழக்குகள் முடிக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சி தரும் தகவல். இறந்த உடல் உண்மையையே பேசும். ஆனால், அது சரியான சமயத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,

திருநெல்வேலி -7.

SCROLL FOR NEXT