இப்படிக்கு இவர்கள்

கிராண்ட் கேன்யனின் பிரம்மாண்டம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிராண்ட் கேன்யன் எனும் இயற்கைப் பேரெழில் கொஞ்சும் அற்புத பள்ளத்தாக்கை 2008-ம் ஆண்டில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்தப் பள்ளத்தாக்கை மாலை வேளையில் நேரில் பார்த்தபோது, சூரிய ஒளிக்கதிர்கள் பள்ளத்தாக்கில் இருந்த அடுக்கடுக்கான பாறைகளில் பட்டு, பொன் நிறத்தில் மின்னிய அற்புதக் காட்சி, வேற்றுக் கிரகத்தின் ஒரு பகுதி போன்ற பிரமிப்பைத்தான் எனக்கு ஏற்படுத்தியது.

பள்ளத்தாக்கின் அகலம் சுமார் 18 மைல் என்பதால் எதிர் கரையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. அதுபோல இதில் ஓடும் கொலராடோ ஆறு சுமார் ஒரு மைல் ஆழத்தில் அதல பாதாளத்தில் ஓடுவதால், அதன் நீரோட்டமும் கண்ணுக்குப் புலப்படவில்லை.

இதிலிருந்தே கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் பிரம்மாண்டம் எத்தகையது என்பதை அறிய முடிந்தது. கிராண்ட் கேன்யனைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கட்டுரையை வெளியிட்ட ‘தி இந்து’ நாளிதழுக்குப் பாராட்டுக்கள்.

சசிபாலன்,‘தி இந்து’ இணையதளத்தில்…

SCROLL FOR NEXT