முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸிலிருந்து விலகியது, விளக்கம் அளித்தது எல்லாமே காலம் கடந்த ஒன்று.
இந்தச் செயலை அவர் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்ட உடனே செய்திருந்தால், அவரது அரசியல் நேர்மையை எல்லோரும் பாராட்டியிருப்பார்கள்.
ஆனால், இந்தத் தாமதம் அவரது கண்ணியத்தைச் சந்தேகிக்க வைக்கிறது. மேலும், இந்தச் செயல் கவிஞர் கண்ணதாசனின் ‘குளத்துல தண்ணியில்ல, கொக்குமில்ல மீனுமில்ல’ என்ற தத்துவப் பாடலைத்தான் நினைவூட்டுகிறது.
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.