இப்படிக்கு இவர்கள்

புலி மட்டுமல்ல; பூச்சியும் வாழ முடியாது!

செய்திப்பிரிவு

'ஞாயிறு களம்' பகுதியில் ‘புலிகள் தேசத்தில் நடப்பது என்ன?' கட்டுரை படித்தேன். புலிகளின் மேல் ஜீவகாருண்யம் காட்டும் பலரின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய், மனித ரத்தம் சுவைத்த புலியைக் கொல்லத்தான் வேண்டும். இல்லையேல், இன்னும் விபரீதமாகும் என்ற கருத்தை ஆணித்தரமாக வைத்த விதம் அருமை.

புலியின் பெருக்கம் வளமையின் குறியீடாகப் பார்க்கப்பட்டாலும், அதற்கான வனங்களின் அளவு இல்லை என்ற செய்தி மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது.

வனத்தை ஆக்கிரமிக்கும் பெரு நிறுவனங்கள் மற்றும் பெரும்புள்ளிகளின் செயலைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இனி காட்டுக்குள் புலி மட்டுமல்ல; சாதாரண பூச்சிகள்கூட வாழ முடியாத நிலை ஏற்படும்.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

SCROLL FOR NEXT