தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 5-ம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், மார்ச் 19-ம் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்களும் எழுதுகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மாணவர்களுக்கான அடிப்படைக் கழிப்பிட வசதியையும் சுத்தமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்தி, மாணவர்கள் நிம்மதியாகத் தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும்.
- சி. விஜய் ஆனந்த்,போத்தனூர்.