இப்படிக்கு இவர்கள்

காந்தி ஏன் தேவை?

செய்திப்பிரிவு

இன்று மத்தியில் ஆள்வோரின் ராமராஜ்யத்துக்கும் காந்தியின் ராமராஜ்யத்துக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள்!

காந்தியின் அறம், சத்தியத்தை ‘தி இந்து’வின் கட்டுரைகளும் தொகுப்புகளும் ஆழமாக எடுத்துக்காட்டின. காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்வதற்கான அத்தனை முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.

இவற்றை முறியடிக்கும் விதத்தில் சிறந்த கட்டுரைகளை ‘தி இந்து’ தொடர்ந்து வெளியிட்டுவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

- கு. பாரதிமோகன்,நா.பரமத்தி.

***

அறத்தைக் கடைப்பிடிப்பதால் வரும் அத்தனை சவால்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சத்தியத்தின் வழி நின்று, வெற்றி பெற்று உலகத்துக்கே ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் காந்தி. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்கத் துடிக்கும் மோசமான இன்றைய சூழ்நிலையில், காந்தியைப் பற்றிய கட்டுரைகள் மனதுக்கு ஆறுதலைத் தந்தன.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

SCROLL FOR NEXT