இப்படிக்கு இவர்கள்

அரசுக்கு அச்சம் வேண்டாம்

செய்திப்பிரிவு

இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டால், நாட்டில் உணவுப் பொருட்கள் பொதுவிநியோகம் என்பது செயலற்றுவிடும். நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 70% பேர் இருக்கும்போது, 40% பேருக்கு மட்டும் பொதுவிநியோக முறையில் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்ற பரிந்துரை, கண்டிப்பாக ஏற்கத் தக்கதல்ல. பொதுவிநியோக முறை நடைமுறையில் உள்ளதால்தான் ஏழை, எளிய மக்கள் வாழ்க்கை நடத்த முடிகிறது. பொதுவிநியோகத்துக்கு வழங்கப்படும் மானியம்குறித்து அரசு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பெருநிறுவனங்களுக்கு அரசு ஆண்டுதோறும் வழங்கும் கோடிக் கணக்கான வரிச் சலுகைகளில் சிறிது குறைத்தாலே போதும், இந்த நாட்டில் உள்ள அனைவரும் பயன் பெரும் வகையில் பொதுவிநியோகத்தைச் செயல்படுத்தலாம்.

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

SCROLL FOR NEXT