நம் நாட்டில், வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய காரணங்களுக்காக மக்கள் இடம்பெயர்தல் என்பது காலங்காலமாக இருக்கும் நடைமுறைதான்.
எனினும், தற்போது, சமூக ஒடுக்குமுறை, இழிவுகளிலிருந்து விடுபடவும்கூட மக்கள் இடம்பெயர்கிறார்கள் என்பதை எண்ணும்போது, நமது சீர்திருத்தவாதிகளின் உழைப்பின் பயன், சாதாரண மக்களுக்குக் கிட்டாது போய்விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.
இருப்பினும், இடம்பெயர்ந்தாவது, உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இன்னும் மங்கிவிடவில்லை என்பது நம்பிக்கையைத் தருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
ஏனெனில், இந்தியா விடுதலைபெற்ற காலத்தில், இயற்கை வளங்கள் சுரண்டப்பட்ட நிலையில் இருந்தது. உழைக்கும் மக்களுக்கும், முதலாளிகளுக்கும் இருக்கும் இடைவெளி இன்னும் தொடர்கிறது. உழைப்பாளியை, உழைக்குமிடத்தில் கூட்டாளி ஆக்கினால், பாவேந்தர் கூறும் சமூக மாற்றங்கள் விரைவில் சாத்தியமாகும்.
- அ. மயில்சாமி, தமிழாசிரியர்,கண்ணம்பாளையம்.