குடியால் வாழ்க்கையை இழக்கும் குடும்பத்துப் பெண்களின் நிலையை மிகுந்த வருத்தத்தோடு பதிவாக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.
குடி குடும்பத்தைக் கெடுக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்தான். சுமார் 5 லட்சம் குடும்பங்கள் மதுவால் வாழ்க்கையை இழந்து தினம் தினம் சொல்ல முடியாத வேதனையில் வெட்கித் தலைகுனிந்துகொண்டிருக்கின்றன.
கல்விக்கு முதல் தலைமுறைப் பெண்கள், சாதிக்க வேண்டுமென்ற வேட்கையில் உள்ள பெண்கள், தந்தையின் குடியால் கனவுகளைச் சிதைத்துக்கொண்டு கண்ணீர் விடுவதை அரசு கவனிக்காதா?
மா.கோவிந்தசாமி, தருமபுரி.