ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் (இடதுசாரிகள் கூட்டமைப்பின் வெற்றி) பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.
அதிகக் கடன் சுமையுடன் மோசமான, ஊழலுடன் நடந்துவந்த அரசுக்கும், கடுமையான பொருளாதார விதிகளை (சாமானிய மக்களின் நலனுக்கு எதிரான) கண்மூடித்தனமாகப் பரிந்துரை செய்துவந்த ஐரோப்பிய மைய வங்கி மற்றும் ஐ.எம்.எஃப். ஆகிவற்றின் செயல்பாடுகளுக்கும் கிரேக்க மக்கள் முடிவுகட்டியுள்ளது ஒரு நல்ல துவக்கம்.
வெற்றி பெற்றுள்ளவர்கள், உடனடித் தீர்வு தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை உணர்ந்து, வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டிய தருணமிது.
- முனைவர் சீ. ஜானகிராமன்,
கும்பகோணம்.