பேராசிரியர் தங்க. ஜெயராமனின் நெல்லைப் பற்றிய கட்டுரை இன்றைய இளம் தலைமுறையினர் நிச்சயமாக அனுபவித்திராத அனுபவங்கள். நானும் இளம் வயதில் இவற்றை அனுபவித்தவன் என்ற முறையில் வரிவரியாய் ரசித்துப் படித்தேன்.
நவீன முறையில் இயந்திரங்கள் மூலம் நடவு, கதிர் அறுப்பது என்று வந்த பிறகு, மனித உழைப்பில் பாதி காணாமல் போய்விட்டது. குடிசை வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் வந்த பிறகு குதிர், பத்தாயம் காணாமல் போய்விட்டது. நவீன அரிசி ஆலை வந்த பிறகு உரல், உலக்கை, திருகை காணாமல் போயின.
எலெக்ட்ரானிக் தராசு வந்த பிறகு படி, மரக்கால், உழக்கும் காணாமல் போனது. உழைப்பும் காணாமல் போன நிலையில், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கைக்குத்தல் அரிசியைத் தேடுகிற காலமாகிவிட்டது இது. எது எப்படியோ நல்ல கட்டுரையைப் படித்த நிறைவான அனுபவம் கிடைத்தது.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.
நெல் உற்பத்தி என்பது மக்களுக்கான உணவாக மட்டும் அல்லாமல், உழவனின் உடன் உழைக்கும் மாடுகளுக்கும் உணவாகும் வகையில் அப்போது இருந்தது. நெல் பயிரிடும்போது பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், மக்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை;
மாடுகளுக்குமே நன்மை பயத்தது. மருந்தில்லா தவிடும் வைக்கோலும் தரமான உணவாகின. விவசாயிகள் இயற்கையுடன் இணைந்து திட்டமிட்டு வாழ்ந்தனர். இன்று விவசாயத்தில் புகுந்த நவீனம், விவசாயத்தையும் நம்மையும் சேர்த்தே அழித்துவருகிறது.
பேராசிரியர் தங்க ஜெயராமன் நெல்லைப் போற்றிய காலத்தை நினைவுகூர்ந்து, நெஞ்சில் கவலையை உண்டாக்கிவிட்டார்.
- பொன். குமார்,சேலம்.
நெல் உற்பத்தி என்பது மக்களுக்கான உணவாக மட்டும் அல்லாமல், உழவனின் உடன் உழைக்கும் மாடுகளுக்கும் உணவாகும் வகையில் அப்போது இருந்தது. நெல் பயிரிடும்போது பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், மக்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை; மாடுகளுக்குமே நன்மை பயத்தது. மருந்தில்லா தவிடும் வைக்கோலும் தரமான உணவாகின. விவசாயிகள் இயற்கையுடன் இணைந்து திட்டமிட்டு வாழ்ந்தனர். இன்று விவசாயத்தில் புகுந்த நவீனம், விவசாயத்தையும் நம்மையும் சேர்த்தே அழித்துவருகிறது. பேராசிரியர் தங்க ஜெயராமன் நெல்லைப் போற்றிய காலத்தை நினைவுகூர்ந்து, நெஞ்சில் கவலையை உண்டாக்கிவிட்டார்.
- பொன். குமார்,சேலம்.