ஒரு சாமானியனின் சரித்திர வெற்றி என்றால், இது மிகையில்லை. காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தும் தன்னால் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியவில்லை என்றால், ராஜிநாமா செய்வேன் என்று கேஜ்ரிவால் சொன்னார்.
அவர் கொண்டுவந்த ஜன் லோக்பால் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸும் பாஜகவும் வாக்களித்தன. அதனால் ராஜினாமா செய்தார். ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சி கவிழக் காரணமாக இருந்த காங்கிரஸுக்கு 60-க்கு மேற்பட்ட இடங்களில் டெபாசிட் காலியானது.
டெல்லி மக்களின் நம்பிக்கையை இழக்க காங்கிரஸுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டன. ஆனால், பாஜகவுக்கு 9 மாதங்களே போதுமானதாக இருந்திருக்கிறது. ஆஆக மேல் மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதைக் காப்பாற்ற இப்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஆஆகவுக்கு இருக்கிறது. அதனால், இப்போது ஜன் லோக்பால் நிறைவேற்றி, முன்மாதிரி மாநிலமாகவும், முன்மாதிரி முதல்வராகவும் செயல்பட வாழ்த்துக்கள்!
- ஹெச். உமர் பாரூக்,வேடசந்தூர்.
***
பிறரைக் குற்றஞ்சாட்டித் தன் தவறை மூடி மறைத்து நடிக்கும் வழக்கமான அரசியல் தலைவர்போல இல்லாமல், மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, மக்களின் நம்பிக்கை பெற்ற தலைவராக அர்விந்த் கேஜ்ரிவால் நடந்துகொண்டதும், ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, டெல்லி மக்கள் தொடங்கியிருக்கும் வழக்கம் நம் நாடு முழுவதும் தொடர வேண்டும்!
- பா. தங்கராஜ்,திப்பணம்பட்டி கிராமம்