இப்படிக்கு இவர்கள்

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நட்பு

செய்திப்பிரிவு

‘எது நல்ல அரசியல் கலாச்சாரம்?’ அருமை. டெல்லியில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரும்போது, வணக்கம் தெரிவித்து மகிழ்வுடன் பேசிக்கொள்வது வழக்கம்.

தேர்தல் பரப்புரையின்போது ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தாலும் நேரில் சந்திக்கும்போது, ‘பழையன மறந்து முகமன் தெரிவிக்கும்’ முறை ஆக்கபூர்வமான அணுகுமுறையாகும். டெல்லி அரசியலைப் போல் ஆரோக்கியமான சூழல் இங்கும் உருவாக வேண்டும்.

- அ.சிவராமன்,மேட்டூர் அணை.

SCROLL FOR NEXT