அறிவியலுக்கும் நம்பிக்கை சார்ந்த கற்பனைகளுக்கும் இடையேயான போராட்டம் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.
அறிவியல் ஆதரவாளர்களும் புராணம் மற்றும் கற்பனைக் கதைகளின் ஆதரவாளர்களும் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பார்கள். ஆனால், உண்மைக்கு ஆதரவாக, உறுதியுடன் நிற்க வேண்டிய இந்திய அறிவியல் காங்கிரஸிலேயே போலி அறிவியலுக்கு ஆதரவாகக் கட்டுரைகளும் விவாதங்களும் நடைபெறுவது கவலை அளிக்கிறது. .
- மருதம் செல்வா, திருப்பூர்.
***
அறிவியலைப் பொறுத்தவரை கனவுகள்தான் பிற்காலத்தில் நிஜமாகின்றன. ஆனால் ‘வலவன் ஏவா வான ஊர்தி’யும், ராவணணின் புஷ்பக விமானமும் அத்தகைய கனவுகளின் பதிவுகளே அன்றி அதற்கான அறிவியல்பூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவே இல்லை.
அது ரைட் சகோதரர்களால்தான் சாத்தியப் பட்டிருக்கிறது என்ற உண்மையை தனது கட்டுரையில் பி.ஏ. கிருஷ்ணன் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். மாணவர்கள் குழப்பமடையாமல் இருக்க இதுபோன்ற முக்கியமான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும்.
- எஸ்.சஞ்சய்,மதுரை.