அண்மைக் காலமாகப் பிரசவ சிகிச்சை மரணங்கள் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. நவீன மருத்துவ முறைகளும் வசதிகளும் பெருகியிருந்தாலும் பிரசவ காலத்தில் தாய் அல்லது சேயின் மரணங்களைத் தடுக்க முடியவில்லை.
போதிய வசதிகள், தீவிர உயிர்காக்கும் சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி வசதிகள் போன்றவை இல்லாமல்தான் பல ஆரம்ப சுகாதார மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பிரசவம் பார்க்கப்படும் நிலை உள்ளது. பொருளாதார வசதி குறைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையைப் பொய்க்கலாமா?
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.