மேயர், துணை மேயர்களை ‘மாண்புமிகு' என்றுதான் அழைக்க வேண்டும். ‘வணக்கத்துக்குரிய' என்ற வார்த்தையைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கருணாநிதி முதல்வராகப் பதவி வகித்தபோது, மேயர்களை ‘வணக்கத்துக்குரிய' என்று அடைமொழி இட்டுத்தான் அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தபோது, முஸ்லிம் லீக் உட்படப் பல கட்சிகளும் பல இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, கருணாநிதி தான் இட்ட ஆணையை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார். இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் விழாக்களுக்கு மேயரை அழைக்கும்போது, ‘வணக்கத்துக்குரிய' என்ற அடைமொழியை அழைப்பிதழ்களில் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.