ஜோதிடர்களின் உந்துதல்படி கிரானைட் வெட்டியெடுப்பதற்கு முன் குழந்தைகள் பலியிடப்படுகின்றனர் என்ற செய்தி பேரதிர்வைத் தருகின்றது. அந்தக் குழந்தைகளும் கடத்திவரப்பட்ட குழந்தைகள் என அறியும்போது, பண ஆசை மனிதர்களை எந்த அளவு இழிசெயலுக்கு இட்டுச்செல்கிறது என்பதைச் சுட்டுகிறது.
மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பும் காலத்தில், நரபலி தொடர்வது கடும் கண்டனத்துக்குரியது.
நரபலியிடுவோரையும் அவர்களை இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபடவைத்த ஜோதிடர்களையும் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிப்பது மிகமிக முக்கியம்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.