‘நம்முடைய மறதியின் வரலாறு’ என்ற கட்டுரையை வாசித்தேன். ‘இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அந்த அரசாங்கம் வர்ணித்தாலும், அவர்களைக் குடிமக்களாக அங்கீகரிக்க அரசாங்கம் முன்வரவில்லை. இந்தக் கருத்துகளை உணர்வுபூர்வமாகப் பலருக்குச் சுட்டிக்காட்டியது இந்தக் கட்டுரை. மலையக வரலாற்றை 200 வருடங்களுக்குப் பின்னர் இன்றைய தலைமுறைக்கு ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
- அ. ஜெயசூர்யன்,பத்திரிகையாளர், ‘தி இந்து’இணையதளம் வழியாக…