இப்படிக்கு இவர்கள்

பாடம் கற்றோமா?

செய்திப்பிரிவு

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாட்னா காந்தி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை எளிதாக மறந்துவிட்டோம்.

சென்னைப் புத்தகக் காட்சிக்கு 11,00,000 வாசகர்கள் வருகைதந்தனர் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தந்தாலும், கூட்ட நெரிசல் ஏதேனும் அசம்பாவிதத்துக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆகவே, அரசு இதைக் கவனத்தில் கொண்டு புத்தகக் காட்சிக்கென நிரந்தர இடம் ஒதுக்கி, தேவையான பாதுகாப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.

- சொ. சந்தனக்குமார்,சிவகிரி.

SCROLL FOR NEXT