இலக்கியம் என்பது இருவழிப் பாதை என உணர்த்தியது ‘வாசகரும் படைப்பாளியே’ என்ற கட்டுரை. சிறந்த வாசக மனத்தை நோக்கியே படைப்பாளியின் எண்ணங்கள் நகர்கின்றன.
சிறந்த வாசகர் படைப்பாளியுடன் பயணித்து, படிமங்களை உணர்ந்து, கலங்கி, கொதித்து, அன்பு கொண்டு, காதலித்து, எல்லா உணர்வுகளையும் அறிகிறான். சிறந்த வாசகரின் எண்ணங்களைப் பதிவிட்டது மகிழ்வை அளிக்கிறது. நல்ல படைப்புகளை எப்போதும் உலகில் எங்காவது ஒருவர் தேடிக் கண்டடைந்துகொண்டே இருப்பார்.
- மோனிகா மாறன்,மின்னஞ்சல் வழியாக….